
கடந்த சில மாதங்களாக அல்ஜீரியா பல அரபு முஸ்லிம் நாடுகளை போன்று மக்கள் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன. அல்ஜீரியா மக்கள் ஆர்பாட்டத்தில் எகிப்து போன்று முழு அளவில் அனைத்து தரப்பும் கலந்து கொள்ளாவிட்டாலும் வாலிபர்கள் , வேலையற்றவர்கள் ஆகிய தரப்புகள் தொடர் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் ஆர்பாட்டங்களை தொடர்ந்து ஜனாதிபதி அப்துல் அஸீஸ், தான் அரசியல் சட்டத்திருத்தங்களை கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு பின்னர் அல்ஜீரியா தேசிய தொலை காட்சியில் நேற்று வெள்ளிகிழமை தோன்றிய ஜனாதிபதி அப்துல் அஸீஸ் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார் வேலையின்மை, வறுமை என்பன ஒழிக்கப்படும். அனைத்து மக்களும் சமமாக பார்க்கபடுவர், மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கத்தினுள் சேர்க்கும் அரசியல் ஜனநாயக மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார்.
அல்ஜீரியாவில் கடந்த 19 ஆண்டு காலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி அப்துல் அஸீஸ் அறிவித்தார். ஆனாலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டே இருக்கும் என உள்துறை அமைச்சர் தாகூ அல்கபிலா தெரிவித்தார். அவசரகால நிலையைத் தளர்த்துவது, அரசியல் சட்டத்திருத்த மாற்றம் கொண்டு வருதல், வறுமை , வேலையின்மை, மக்கள் சுதந்திரமாக கூடவும், கூட்டங்கள் போடவும், அமைதியான ஆர்பாட்டங்கள் செய்யவும் அனுமதி வழங்குதல் என்ற கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிக்களின் ஆர்பாட்டங்கள் இருந்தன.
அவசரகால நிலை முடிவுக்குக் கொண்டவரப்பட்டதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, எனினும் அல்ஜீரிய அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment