Saturday, April 16, 2011

முபாரக்கின் குற்றங்கள் நிரூபிக்கபட்டால் மரணதண்டனை


முபாரக்கின் குற்றங்கள் நிரூபிக்கபட்டால் மரணதண்டனை

mubarak
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரின் மனைவி ,பிள்ளைகள் பிள்ளைகளின் மனைவியர் ஆகியோருக்கு எகிப்தை விட்டு வெளியேற எகிப்தின் தற்போதைய அதிபர் கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்ததை தொடர்ந்து முபாரக் மீது அதிகார துஷ்பிரயோகம், படுகொலைகள் ஊழல் ,மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஹுஸ்னி முபாரக் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எகிப்திய செய்திகள் தெரிவிகின்றன.
எகிப்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை விசாரிக்க இடைகால இராணுவ நிர்வாகம் தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது அதில் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை ஆரம்பமாக முன்பே உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முபாரக் தற்போது இராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார், இவர் கடந்த திங்கள் கிழமை சவூதிக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார் என்று எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட முபாரக்கும் அவரது மகன்கள் ஆலா, கமால் ஆகியோர் 15 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எகிப்தை தற்போது நிர்வகித்து வரும் இராணுவ நிர்வாகம் கடந்த மாதம் மார்ச் 19 ஆம் தேதி உத்தேச அரசியல் சட்டத்திருத்தம் மீதான அபிப்பிராயவாக்கெடுப்பு நடத்தியது. இதில் எகிப்து மக்கள் அரசியல் சட்டத்திருத்தம் மீது மாற்றங்கள் ,திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் , செய்யப்பட்ட பின்னர் அந்த மாற்றங்களுக்கு உள்ளான சட்டத்திருத்தத்தை அங்கீகரிப்பதாக வாக்களித்துள்ளனர்.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஆம் என்று வாக்களிக்குமாறு மக்களை கோரியிருந்தது குறிபிடத்தக்கது,  தற்போது பாராளுமன்ற தேர்தலையும், ஜனாதிபதி தேர்தல் ஒன்றையும் எகிப்து எதிர்கொள்ளவுள்ளது.
 0 00shareNew

No comments:

Post a Comment